எறும்பு - பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழஆசைப்படவில்லை. நாய் - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை. யானை - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை. காகம் - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை. அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!! நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்.....??? நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய்.....??? நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......??? நீ ஏன் வருந்துகிறாய்......??? நீ ஏன் ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......??? உன் வாழ்க்கை விசேஷமானது......!!! நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது.....!!! நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது......!!! நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது....!!! ஆகாயம் போல் பூமி இல்லை.....!!! பூமி போல் காற்று இல்லை .....!!! காற்று போல் தீ இல்லை...!!! தீயைப் போல் தண்ணீர் இல்லை.......!!! ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை.....!!! பல்லி போல் புலி இல்லை......!!! தங்கம் போல் தகரம் இல்லை......!!! பலாப் பழம் போல் வாழைப் பழம் இல்லை......!!! கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை......!!! துணி போல்...