Posts

Showing posts from February, 2022

தத்துவங்கள்

*தத்துவங்கள்* 1. ஒளிவு மறைவு இன்றி பேச்சிலும் செயலிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள். 2. பெருந்தன்மையுடன் இருங்கள். பிறர் செய்த குற்றம், குறைகளை மன்னிக்கப் பழகுங்கள். 3. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் நம் கைவசத்தில் இல்லாதவை. நிஜமான நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். 4. எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும். 5. வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். 6. எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள். 7. யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். 8. வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள். 9. பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள். 10. ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள். 11. அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள். 12. சத்தியம் இருக்குமிடத்...

பாவத்தின்_தந்தை_யார்

#பாவத்தின்_தந்தை_யார்..? அரசன் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஒன்று வந்தது. பாவத்தின் தந்தை யார்? அரசவையில் இருந்த பண்டிதரை தனது நண்பன் போலவே அவன் நடத்தி வந்தான். அவரை நோக்கி, “பாவத்தின் தந்தை யார்? இதற்கான சரியான பதிலை நீங்கள் சொல்ல வேண்டும்.” என்றான். பண்டிதருக்கோ பெரும் குழப்பம் ஏற்பட்டது. யார் பாவத்தை உருவாக்கினார்கள்? யாரைப் பாவத்தின் தந்தை என்று சொல்வது? அவரது முகத்தில் நிலவிய குழப்பத்தைக் கண்ட அரசன், “சரி, இதற்கு உடனடியாகப் பதில் சொல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்குள் பதில் சொல்லுங்கள். ஆனால் சரியான பதிலைச் சொல்லாவிட்டால் தகுந்த தண்டனை உண்டு” என்று எச்சரித்தான். வீடு திரும்பிய பண்டிதர் தனக்குத் தெரிந்த நூல்களை எல்லாம் புரட்டினார். சரியான பதிலைக் காணோம். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்த்தார். அவர்கள் உதட்டைப் பிதுக்கினர். நாட்கள் கழிந்தன. ஊரில் ஓடும் நதிக்கரையின் ஓரமாக சோகமான முகத்துடன் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். நாளைக்குள் பதில் சொல்ல வேண்டுமே! அவர் முகத்தில் நிலவிய குழப்பதைப் பார்த்த தாசி ஒருத்தி பண்டிதரை அழைத்தாள். “என்ன பண்டிதரே! எப்போதும் உற்சாகமாகப் போவீர்கள். இன்று ஒரே...

வள்ளலார் 43 அறிவுரைகள்

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை. 7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. 8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு. 11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.  13. அவ்வப்போது பரிசுகள் அளி.  14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே. 15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்! 16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். 17. உன் சொத்தை தா...

நலவாழ்வியல் சிந்தனைகள்

*நலவாழ்வியல் சிந்தனைகள்!!* 🟣🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🟣 🌀 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. *அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.* 🌀 வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. *யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.* 🌀 நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. *வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* 🌀 மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். *தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* 🟣🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🟣 *நல்லதே நினை.*  *நல்லதே நடக்கும்.* *வாழ்க வளமுடன்*  *வாழ்க நலமுடன்* *காலை வணக்கம்* 🙏

ஒப்பிடாத போது வாழ்வு மிகவும் அழகானது

ஒரு ஸென் குருவிடம் சீடர் ஒரு கேள்வி கேட்டார். "நாம் ஏன் இவ்வளவு துயரப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்?" <3  அவர் "அதோ அந்த சைப்ரஸ் மரத்தைப் பார்.!" என்றார். கேட்டவர் காட்டிய மரத்தைப் பார்த்தார்."எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!" "மறுபடி பார்.! அந்த மரத்திற்கு அருகே ஒரு ரோஜாச் செடி இருக்கிறது. அந்த ரோஜாச் செடி நான் ஏன் குட்டையாக இருக்கிறேன் என்று எப்போதும் புகாரிட்டதில்லை." "அந்த சைப்ரஸ் மரமும் ரோஜாக்களை பார்த்து நான் மிக உயரமாக வளர்ந்தும் ஏன் என்னிடம் ரோஜாப் பூ மலர்வதில்லை என்று கேட்பதில்லை. .காலை நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.இரவு நேரத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன்.ரோஜாச் செடியோ சைப்ரஸ் மரமோ வருந்தி அழுவதை நான் கேட்டதில்லை." இரண்டும் தாம் எப்படி இருக்கின்றனவோ அதில் திருப்தியோடு இருக்க அங்கே ஆழ்ந்த அமைதிதான் இருக்கிறது. ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை. உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்ற விசாரணை இருப்பதில்லை." *ஒப்பிடாத வரையில் வாழ்வில் பிரச்சினையில்லை*. *ஒப்பிடாத போது வாழ்வு மிகவும் அழகானது* . --ஓஷோ--