Posts

Showing posts from August, 2024

தவறு

 தவறு நிகழ்வது வெகு சாதாரணம்.  நாம் என்ன தான் நம்மைத் திருத்திக் கொண்டே இருந்தாலும் புதுப்புது விஷயங்களில் தவறு நடந்து கொண்டு தான் இருக்கும். அதனால் உங்களையே நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. தவறு நிகழாமல் பார்த்துக் கொள்வது மட்டும் புத்திசாலித்தனம் அல்ல. தவறு நிகழும் போது அந்தத் தவறை சரி செய்யவும், அதைப் பாடமாக எடுத்துக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.

எண்ணம்

 நீ உயர்வதற்கு ஏணி தேவையில்லை, எண்ணம் தேவை! எண்ணத்தை வல்லமைப்படுத்தும் போதுதான்மாற்றத்தை உருவாக்கலாம்! எண்ணத்தினுள் உள்ள உணர்வுகளே உன்னை துரிதப்படுத்தும், பக்குவப்படுத்தும்! உனது திறமைகள் தினம் தினம் பிறரோடு பழகும் விதத்தில் உள்ளபோது புதுமைகள் பிறக்கவே செய்யும்!

வெற்றி

 இன்பமும் துன்பமும் கலந்திருந்தால் இருளில்கூட புத்தகம் வாசிக்கலாம். முயற்சியும் பயிற்சியும் கலந்திருந்தால் தூக்கத்தில்கூட சொர்க்கம் காணலாம். உழைப்பும் துடிப்பும் கலந்திருந்தால் வேதனையில்கூட வெற்றி காணலாம். வியர்வைத் துளியில் பயிர் செய்யுங்கள். விளைச்சல் பெறுகட்டும். முடியாததை முடியும் என்று முனையும் போது தான் முயற்சி முளைக்கிறது.  உங்களது உழைப்பால் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்க முடியும். உங்களது வெற்றி உங்களால் மட்டுமே பெற முடியும்

எண்ணங்களை

 இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என் வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவேற்றிக் கொள்ள வேண்டும். எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப் பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். எதை நம் ஆழ் மனம் எண்ணுகிறதோ அதையே நம் செயல்களும் பிரதிபலிக்கின்றன. சபாஷ் நல்லா பண்ற, அசத்தல், பிரமாதம், ஆகா அருமை... இது போன்ற வார்த்தைகள். எல்லாம் மற்றவர்களிடமிருந்து வர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நம்மிடமிருந்து நமக்காக வர வேண்டும்.

சந்தோஷம் தாழ்வு மனப்பான்மை

 சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்கள் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள்.  உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும்; உடலின் சக்தி தேவையை நிறைவேற்றும். உற்சாகமாக உணர்வீர்கள்.  தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிக் கடலில் போடுங்கள். ஏதேனும் தவறு, தோல்வி நடந்தால் அதற்குரிய காரணத்தை ஆராய வேண்டுமே தவிர... நத்தை ஓட்டுக்குள் முடங்கிவிடக் கூடாது.  உங்கள் மனதை நீங்கள்தான் உற்சாகப்படுத்த வேண்டும்.

Iraianbu quotes english

 1) Soothing words anoint the wounds prior to administration of medicine.  2) Discretion is not analogous to discrimination. 3) Words are superfluous when gestures galore 4) Absentmindedness is not synonymous with dropping the mind. 5) Craze for identity starts with fancy numbers. 6) Nature keeps the invaluable hidden. 7) Broken faith becomes the breeding ground for suspicion. 8) While conferring positions, Competence should take priority over comraderie. 9) Sincerity in silly things and slipshod performance in the salient is the sign of sycophants. 10) Avarice is an atrocious quagmire and those already in it, try to drag you deep. 11) Knowledge shared  becomes wisdom earned. 12) People hear the whispers keen and brush aside the stentorian voice. 13) Names are mere wishful thinking of the parents. 14) Merit is not to be judged by mere borrowed knowledge but by burgeoning performance. 15) A noble leader analyzes, synthesize...

Irainabu quotes tamil

 1) கைத்தடியாக இல்லாமல் முதுகெலும்பாவதே முதிர்ந்த நட்பு. 2) அழும்போது கடந்த காலத்திலும்  சிரிக்கும்போது நிகழ்காலத்திலும்  நிலைகுத்தி நிற்கிறோம். 3) வியர்வையைச் சேமிக்கிறவன்  கண்ணீரைச் செலவழிப்பான்  4) பற்று வைப்பவர்கள்  பற்ற வைப்பதில்லை. 5) கள்ளிக்காட்டுக்கு எதற்கு  முள்ளில் வேலி! 6) வளமானவரிடம் அல்ல, வளர்த்தவரிடம் மட்டுமே  வாலாட்டுகிறது நாய். 7) சிலர்  அலுவலக உடுப்பை  அகத்திலும்  அகற்றுவதே இல்லை. 8) தங்கள் இடத்தில்  வெடுக் வெடுக்கென்று  பேசுபவர்கள்தாம்  வேறுபட்ட சூழலில்  வெட வெடவென  நடுங்குகிறார்கள். 9) கடைக்கால் கண்ணுக்குத் தெரிவதில்லை என அதில்  கஞ்சத்தனம் காட்டுபவனின் கட்டடமே  இடிந்து விழும். 10) வண்டுகள் வாசிப்பதையே  கைத்தட்டலாக எண்ணி  களிப்படைகின்றன காட்டுப்பூக்கள். 11) திருப்பமில்லா வாழ்வும்  விருப்பமில்லா உறவும்  வெறுத்துப் போகும். 12) கடல்களைக் கடந்துவந்தவன்  கைவிரல் கதவிடுக்கில் சிக்கி நசுங்குவது போலத்தான்  சில நேரங்களில்  வாழ்க்கை. 13) எளிதாக இயலும்...

கவரிமான்

 கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது, அதுவும் எருமை மாடு வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள். கவரிமான் எங்கு வசிக்கிறது..? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..? எப்படித் தற்கொலை செய்து கொள்ளும் ? " மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் ” என்கிறார் திருவள்ளுவர் ( 969ஆம் குறளில் ) கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்.... அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.. ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ? குழப்பமாக இருக்கிறது அல்லவா ? அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள்.. அதில் சொல்லப்பட்டு இருப்பது “ கவரி மான் அல்ல..” கவரி மா…! ஆம்..கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.. அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்.. புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்க...