Posts

யாராலும் ஏமாற்ற முடியாத மனநிலை பெற பத்து விதிகள்

 யாராலும் ஏமாற்ற முடியாத மனநிலை பெற பத்து விதிகள் 1. மனதை அடக்கியவன் உலகத்தையே ஜெயித்தவன். 2. உண்மை அறியாது யாரையும் நம்பாதே. 3. பேச்சைக் கேளாதே; செயலையே கவனி‌.‌ 4. பேராசை வந்தால் அறிவு மறைந்துவிடும். 5. உன் உள்ளுணர்வு உன் குரல்; அதைத் துரோகிக்காதே. 6. அளவுக்கு மீறிய நம்பிக்கை, ஏமாற்றத்தின் கதவைத் திறக்கும். 7. சந்தேகம் ஒரு குற்றம் அல்ல; சுயபாதுகாப்பு. 8. நினைவின் தெளிவு ஏமாற்றத்தின் எதிரி. 9. யார் உன்னை மிகையாகப் புகழ்கிறார்களோ, அவர்களை அதிகம் கவனிக்காதே. 10. அறிவு விழிப்புடன் இருப்பவரை எவராலும் வழி தவறச் செய்ய முடியாது.

ஜபம் செய்யும் திசை மற்றும் பலன்கள்

 *ஜபம் செய்யும் திசை* *மற்றும் பலன்கள்*:  வீடு- பத்து மடங்கு பலன் பலன். கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன். குளம்- ஆயிரம் மடங்கு பலன். ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன். மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன். சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன். அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன். சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன். ஜபம் செய்ய வேண்டிய திசையும் பலனும்: கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம். தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை... தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை. மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு. வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல். வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும். வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்.

தண்ணீர் கேன்

 மனித கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்த கழிசடை என்றால் இந்த 20 லிட்டர் தண்ணீர் கேன் தான் ஒரு பொருளை எங்கு பிடித்து தூக்கினால் லகுவாகத் தூக்க முடியும் என்று ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கிறது. அது அந்த பொருளின் ஈர்ப்பு மைய்யத்தை (சென்டர் ஆப் கிராவிடி) பொறுத்து மாறுபடும். ஆனால் இந்த உருளையை எந்த பக்கம் பிடித்து தூக்கினாலும் முதுகு டேமேஜ் தான். அதுவும் சிறு குழந்தைகள் அல்லது பெண்மணிகள் அல்லது முதியோர்கள் மட்டும் இருக்கும் இடங்களில் இது ஒரு எமன். சில இடங்களில் பாகுபலிகளும் அவதிப்படுகிறார்கள். இரண்டு உதாரணம். நடந்தது. 1. முதியவர். இதை தூக்க முடியாத காரணத்தினால் தண்ணீர் கேன் போடுபவரை வீட்டிற்குள் அழைத்து இந்த கேனை கவிழ்த்து போட கூறியிருக்கிறார். கிட்சன் வரை வந்து சென்று இருக்கிறார்கள். வசதியாய் போய்விட்டது. அந்த வீட்டில் முதியவர்கள் இருவர் தான். இருவரும் சூப்பர் சீனியர் சிட்டிசன்ஸ் வேறு. நோட்டம் பார்த்து ஒரு முகூர்த்த தினத்தில் கிடைத்ததை லவட்டி விட்டார்கள் அந்த பிறன் பொருள் பிரியர்கள். 2. மற்றொரு இடத்தில். நன்றாக நடமாடிக் கொண்டிருந்த முதியவர். இது போன்ற தொந்தரவு இருக்கக் கூடாது என்பதால் அவரே த...

புண்ணியம் என்பது என்ன?

 புண்ணியம் என்பது என்ன? நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது. மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான். அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.  ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.  இது தான் புண்ணியம். மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.  உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.  அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.  உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.  இறைவனை துணைக்கு அழையுங்கள். மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள். தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள். அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.  உங்கள் உள்ளம் மகிழ்ச்சிய...

எல்லாம் அதுவாகவே சரியாகும்

 *எல்லாம் அதுவாகவே சரியாகும்* எல்லாம் அதுவாகவே சரியாகும். கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதுவும் ஒரு பிரபஞ்ச ரகசியமே. எப்படி ? எந்த ஒரு நிகழ்வும் இங்கு நிலைத்து நிற்பதில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால், நாம் தான் சில நல்ல, அல்லது கெட்ட நிகழ்வுகளையோ, பொருட்களையோ, நபர்களையோ பிடித்து வைத்துக்கொண்டு, புலம்பி அமைதி இழந்து திரிகின்றோம். இது எல்லாமே நமது எண்ணப்பதிவுகள் மட்டுமே என்பதை தெளிவாகஉணர்ந்து கொள்வோம். ஒருவரைப்பற்றி தப்பான அபிப்ராயம் வச்சிருப்போம். அந்த நிமிடத்தில் அவர் அப்படி இருந்திருக்கலாம். ஆனால், அடுத்த நொடியே அவர் தவற்றை உணர்ந்து திருந்தியும் இருப்பார்.ஆனால், நாம் தான் நமது மனதில் "அவர் தப்பானவர் தான் என எண்ணத்தில் பதிந்து கொண்டு, அவரைப் பார்க்கும் போதெல்லாம் எரிந்து பேசியும், வம்பு இழுத்துக் கொண்டும், மனதில் வன்மம் கொண்டும் திரிவோம். இதில் கூடுதலாக நல்லவருக்கு காலமில்லை என்று காலத்தை வேறு திட்டுவோம். நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். காலம் எனும் கடவுள், பேராற்றல் எல்லாவற்றையும் மிகத்துல்லிதமாக செய்பவர் என்பதை. அதனால், தேவையற்ற எந்த ஒரு எ...

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்

 புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள் அல்லது போதனைகள் "நாலு சிறந்த உண்மைகள்" (Four Noble Truths) என்ற பெயரில் மிக முக்கியமானவை. அவை பின்வருமாறு: 1. துக்கம் (Dukkha) - உலகில் துயரம் உள்ளது மனித வாழ்க்கையில் பிறப்பு, முதுமை, நோய், மரணம் ஆகியவை தவிர்க்க முடியாத துயரங்களாகும். ஆசை, விருப்பு, வெறுப்பு போன்றவை துக்கத்துக்கு காரணமாகின்றன. 2. துக்க சமுதயம் – துயரத்திற்கு காரணம் உள்ளது துயரத்தின் மூல காரணம் தன்வெறி (தனிப்பட்ட ஆசை) ஆகும். இச்சை (தன்வெறி, தாகம் - Tanha) இன்றி மனம் அமைதியடையாது. 3. துக்க நிவாரணம் - துயரை முற்றிலும் நீக்க முடியும் இச்சையை விட்டொழிக்கும்போது துயரத்திலிருந்து விடுபட முடியும். இதையே நிர்வாணம் (Nirvana) என அழைக்கின்றனர். 4. மாகா மார்க்கம் – துயரத்தை நீக்கும் வழி உள்ளது      அது தான் அஷ்டாங்க மார்க்கம் (Eightfold Path): 1. சரி தரிசனம் - சரியான புரிதல் 2. சரி சிந்தனை - நல்ல எண்ணங்கள் 3. சரி பேச்சு - பொய்யில்லாத, நன்மையான சொற்கள் 4. சரி செயல்கள் - நல்ல செயல்கள் 5. சரி வாழ்வு - நியாயமான வாழ்வு 6. சரி முயற்சி - தவறுகளைத் தவிர்க்க முயற்சி 7. சர...

இளமை முதுமை

 _இனியும் வேண்டும்_ _*என்பது இளமை..*_ _இனியும் வேண்டாம்_ _*என்பது முதுமை.!*_ _இனி எப்போ விடியும்_ _*என்பது இளமை..*_ _இனி ஏன் விடிகிறது_ _*என்பது முதுமை..!*_ _மறக்க வேண்டாததை _*மறந்து விடுவது இளமை..*_ _மறக்க வேண்டியதை_ _*மறக்காமல் இருப்பது முதுமை..!*_ _சில்லறை தேடி அலைய_ _*நினைப்பது இளமை...*_ _கல்லறை தேடி_ _*அலைய நினைப்பது முதுமை..!*_ _இனித்தான் இனிமையான வாழ்வு_ _*என்பது இளமை...*_ _இனித்தான் கசப்பான_ _*வாழ்வு என்பது முதுமை..!*_ _மறைக்க வேண்டியதை_ _*மறைக்காதது இளமை...*_ _மறைக்க வேண்டியதை_ _*மறைப்பது முதுமை..!*_ _வாழும் காலம்_ _*இனிமை என்பது இளமை..*_ _வாழ்ந்த காலம்_ _*இனிமை என்பது முதுமை.!*_ _விரும்பினாலும்_ _*கிடைக்காதது இளமை..*_ _விரும்பாமலே_ _*கிடைப்பது முதுமை...!*_ _இளமையோ_முதுமையோ_ _*வாழும் வரை இளமையான நினைவுகளோடு மகிழ்ச்சியாக வாழ்வோம்..!*_