அமைதியான மனம் பெற 8 வழி முறைகள்
*_அமைதியான மனம் பெற 8 வழி முறைகள்* 1. *கேட்டால் ஒழிய மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்..* பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுப்படும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம். 2. *மறக்கவும்... மன்னிக்கவும்...* இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள். 3. *பாராட்டுக்காக ஏங்காதீர்கள்....* உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்...