Posts

Showing posts from September, 2021

நல்ல எண்ணங்களே

*'' நல்ல எண்ணங்களே. ''* எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு.  எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள். ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் காலணி கம்பெனி ஒன்று தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஆளை அனுப்பியது.  அவர் அந்த ஊருக்குச் சென்று சில நாட்கள் தங்கினார். தெருவில் நடப்பவர்களின் கால்களை ஆர்வத்தோடு கவனித்தார். தங்கள் கம்பெனியின் காலணிகளை அங்கே விற்க முடியுமா என்று நோட்டம் விட்டார். அந்த கிராமத்தில் வசித்தவர்கள் யாருமே கால்களில் காலணிகளை அணியாமல் நடந்து சென்றனர். இதைப் பார்த்த விற்பனையாளருக்கு சலிப்பு ஏற்பட்டது.  இந்த மக்களுக்கு காலணியின் உபயோகமே  தெரியவில்லை. ஏற்கெனவே காலணி அணிந்து அதன் உபயோகம் தெரிந்தவர்கள் என்றால் நமது சரக்குகளை விற்பனை செய்வது எளிது.  இங்கே ஒரு ஜோடி காலணிகளைக் கூட விற்பனை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார். எனவே தனது கம்பெனிக்குத் திரும்பி...

நாம் அனைவரும் நம் பொறுப்பை நாமே பார்த்துக் கொண்டால் வாழ்வு இனிமையாக இருக்கும். ஆரோக்கியமும் கைகூடும்.

அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.  ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார். மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக. மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார். குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர். ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து...

கோபம்

⛵கோபம் வந்தால் வெற்று படகாய் மாறு நீ படகில் சென்று கொண்டிருக்கிறாய் எதிரே மற்றொரு படகில் வந்து மோதும் போது அவர் மேல் கோபப்படுகிறாய்  ஏனெனில்  கோபம் கொள்ள ஒரு நபர் இருக்கிறார் அதுவே ஒரு காலியான படகு மோதும் போது சூழ்நிலையை சரிசெய்கிறாய் அதன்மீது கோபப்பட மாட்டாய் ஏனெனில்  அங்கே கோபம் கொள்ள நபர் யாரும் இல்லை வெறுமையே உள்ளது நீ வெறுமையாக இருக்கும்போது உன்மேல் யாராலும் கோபப்பட முடியாது அது உன்னையும் தாக்காது வெற்றுப்படகாய் மாறிவிடு ⛵ 🚣 ஓஷோ 🚣