மனதை அமைதி படுத்தும் ஏழு சிறந்த வழிகள்
* சிந்தனை* மனதை அமைதி படுத்தும் ஏழு சிறந்த வழிகள். 1) உளமாற மன்னியுங்கள். உங்களை சங்கட படுத்தியவர்களை, உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை, மனதிலே சுமந்து கொண்டு அலையாதீர்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை. அதற்காக மீண்டும் அவர்களிடம் நட்பு பாராட்ட வேண்டியது அவசியமில்லை. நீங்கள் செய்வது உங்கள் மனதை சுத்தப்படுத்தும் வழி மட்டுமே. இப்படி நீங்கள் மன்னிக்க ஏற்றுக்கொண்டால், நீங்கள் பலவீனமானவர் என்று அர்த்தம் அல்ல. உங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகள் பல உள்ளது, இப்படி பகைமை சுமந்து கொண்டு, மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் என உறுதி கொள்ளுங்கள். 2) மனதார மன்னிப்பு கேளுங்கள். தெரிந்தோ தெரியாமலோ நம்மால் யாராவது எந்த வகையிலாவது பாதிக்கப் பட்டு இருந்தால், மனதார மன்னிப்பு கேளுங்கள். மீண்டும் அந்த தவரை செய்யக்கூடாது என உறுதி கொள்ளுங்கள். 3) நன்றி கூறுங்கள். இந்த தாய் தந்தையை, உற்றார் உறவினர்களை, மனைவி/ கணவன் குழந்தைகளை, சுற்றமும் நட்புகளையும், இந்த இடத்தையும் சமூகத்தையும், அறிவும் ஆற்றலும், உடலும் ஆரோக்கியமும், தொழிலும் சம்பாதியமும், வசதி வாய்ப...