Posts

Showing posts from December, 2024

அற்பம் அல்லது அற்புதம்

 *அற்பம் அல்லது* *அற்புதம்* மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்ணைத் தின்று ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன. ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும் வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டு இருப்பது போல நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான். ஒரே நீரைத் தான் அருந்துகிறோம், ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும். நாம் எதை சேர்க்கிறோம் அற்பத்தையா? இல்லை அற்புதத்தையா? அற்பம் என்னும் ஆறு குணங்கள் 1 பேராசை 2 கோபம் 3 கடும்பற்று 4 சுயநலம் 5 உயர்வு தாழ்வு மனப்பான்மை 6 வஞ்சம் அற்புதம் என்னும் ஆறு குணங்கள் 1 நிறை மனம் 2 பொறுமை 3 அன்பு காட்டுதல் 4 உதவி செய்தல் 5 சம நோக்கு 6 மன்னிப்பு இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால் அற்பம் நம்முள் எட்டிப் பார்காது. அற்புதம் நம்மை விட்டு விலகிப் போகாது. *🍃Sri Yoga & Naturopathy*🍃 *யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*