இளமை முதுமை

 _இனியும் வேண்டும்_ _*என்பது இளமை..*_

_இனியும் வேண்டாம்_ _*என்பது முதுமை.!*_


_இனி எப்போ விடியும்_ _*என்பது இளமை..*_

_இனி ஏன் விடிகிறது_ _*என்பது முதுமை..!*_


_மறக்க வேண்டாததை _*மறந்து விடுவது இளமை..*_

_மறக்க வேண்டியதை_ _*மறக்காமல் இருப்பது முதுமை..!*_


_சில்லறை தேடி அலைய_ _*நினைப்பது இளமை...*_

_கல்லறை தேடி_ _*அலைய நினைப்பது முதுமை..!*_


_இனித்தான் இனிமையான வாழ்வு_ _*என்பது இளமை...*_

_இனித்தான் கசப்பான_ _*வாழ்வு என்பது முதுமை..!*_


_மறைக்க வேண்டியதை_ _*மறைக்காதது இளமை...*_

_மறைக்க வேண்டியதை_ _*மறைப்பது முதுமை..!*_


_வாழும் காலம்_ _*இனிமை என்பது இளமை..*_

_வாழ்ந்த காலம்_ _*இனிமை என்பது முதுமை.!*_


_விரும்பினாலும்_ _*கிடைக்காதது இளமை..*_

_விரும்பாமலே_ _*கிடைப்பது முதுமை...!*_


_இளமையோ_முதுமையோ_ _*வாழும் வரை இளமையான நினைவுகளோடு மகிழ்ச்சியாக வாழ்வோம்..!*_

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்