உங்களுக்கு ஏற்படும் தோல்வியை.. 'ஆணியாக' நினைத்தால் உறுத்தும்..! 'ஏணியாக' நினைத்தால் உயர்த்தும்..!!

உங்களுக்கு ஏற்படும் தோல்வியை.. 'ஆணியாக' நினைத்தால் உறுத்தும்..! 'ஏணியாக' நினைத்தால் உயர்த்தும்..!!

தேவைகள் என்னவோ  தீரப்போவதில்லை, ஒன்று போனால் மற்றொன்று வந்து கொண்டே தான் இருக்கும் ஆக வாழும் நாட்களில் மகிழ்ச்சியையும், மனஅமைதியையும் தேட முயற்சி செய்வோம்..!!

எந்த ஒரு மனிதனின் உழைப்பும் பணமாகும்... ஆனால், உழவனுடைய உழைப்பு மட்டுமே மனிதனுக்கு உணவாகும்...

எல்லாம் இழந்தாலும் கலங்காதே.. காலி பாத்திரம் தான் நிரப்பப்படும்..!!

வெற்றியின் போது கண்ணீர் ஆனந்தம் என்றால்.. தோல்வியின் போது புன்னகையும் ஆனந்தமே..!!

அறியாமல் இருப்பது தவறல்ல.. அறிய முயலாமல் இருப்பது தான் தவறு..!!

ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒவ்வொரு ம‌னிதனு‌ம்.. நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்..!!

அன்பை அலட்சியம் செய்தால் கோபம் விடையாகும்.... கோபத்தை அலட்சியம் செய்தால் மௌனம் விடையாகும்.... மௌனத்தை அலட்சியம் செய்தால் கண்ணீர் விடையாகும்....கண்ணீரை அலட்சியம் செய்தால்...... உங்களைப் பழி தீர்க்கும் புன்னகையே....இறுதி விடையாகும்....

அச்சம் இருக்கும் வரை முன்னேற்றத்திற்கு இடமில்லை..! முயற்சி இருக்கும் வரை பின்னடைவுக்கு இடமில்லை..!தன்னம்பிக்கை இருக்கும் வரை தோல்விக்கு இடமில்லை..!!


வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்.

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்