செய்வதை பிடித்து செய்வோம்.பிடித்ததை மட்டும் செய்வோம்
*🌾🌻மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.. வாழ்வதே அதற்காகத்தானே!*
*🤘~தலாய் லாமா*
*༺🌷༻*
தலாய் லாமா சொல்வார்.. *வாழ்வதே மகிழ்ச்சியாக இருப்பதற்காகத்தான்.* எனவே சோகங்களுக்கும், வருத்தங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.
*༺🌷༻*
*கிடைத்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாமே.* அனைவரும் எதற்காகப் பாடுபடுகிறோம் நாம் வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்குத்தானே அதை விட்டு விட்டு ஏமாற்றங்களை நினைத்து நாம் ஏன் வருந்த வேண்டும்.
*༺🌷༻*
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். வாழ்வில் *கிடைப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்பவனே சிறந்த மனிதன்*. உங்களை நீங்கள் தான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். *உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்லுங்கள்.* *பிடித்த உணவை உண்ணுங்கள்.* *பிடித்த உடையை அணியுங்கள்.*
*༺🌷༻*
வாழ்க்கையில் தன்னிறைவு அடைபவனே என்றும் மகிழ்ச்சியோடு இருக்கிறான். சந்தோசம் அது தான் மனிதனுடைய பலம். அந்த *உற்சாகம் தான் அவனுடையத் தன்னம்பிக்கையை வளர்க்கிறது*. *எந்த சூழ்நிலையிலும் எவனொருவன் மகிழ்ச்சியாக இருக்கிறானோ அவனே வாழ்வில் வெற்றியடைகிறான்.*
*༺🌷༻*
பெற்றோர்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் துணையிடம் மனம் விட்டுப் பேசுங்கள். *நேரம் கிடைக்கும்போது உங்கள் நண்பர்களிடம் பேசுங்கள்.* *உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களைப் படியுங்கள்.*
*༺🌷༻*
சின்ன சின்ன சந்தோசங்கள் மனதைப் புத்துணர்ச்சியாக்குகின்றன. மகரயாழ் சிலருக்கு சூடாகக் காபி அருந்திக்கொண்டே நாளிதழ் படிப்பதில் மகிழ்ச்சி பிள்ளைகளுக்கு ஆசிரியர் வரவில்லையென்றால் மகிழ்ச்சி அலுவலகம் செல்வோருக்கு அன்றைய தினம் எந்த பிரச்சினையும் வராமல் இருந்தால் மகிழ்ச்சி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
*༺🌷༻*
சின்னக் குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களைப் போல கவலைகளையெல்லாம விட்டொழியுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் எப்போதும். வாழ்க்கையே வாழத்தானே அதையும் மகிழ்வோடு வாழ்ந்துப் பார்ப்போமே.
*செய்வதை பிடித்து செய்வோம்.*
*பிடித்ததை மட்டும் செய்வோம்*
*வாழ்க்கை அழகாக இருக்கும்*
*வாழ்க வளமுடன்*
👍🌺🌺🌺🌺👍
Comments
Post a Comment