எது முதிர்ச்சி
ஆதிசங்கரர்
அருளிய
'எது முதிர்ச்சி? '
பிறரைத்
திருத்த முயல்வதை விடுத்து
தன்னைத்
திருத்த முனைவது முதிர்ச்சி.
1
பிறரை அவர்தம்
இயல்புக
ளோடே
ஏற்றுக்
கொள்ள
முடிவது
முதிர்ச்சி.
2
ஒவ்வொருவருமே
அவரவர்
பார்வையில்
நேர்மையாளரே
என்பது
முதிர்ச்சி.
3
விடாப்பிடிவாதம்
விட்டுக்
கொடுத்து பற்றினை விட்டிடப்
பயில்வது
முதிர்ச்சி.
4
உறவால்
எதையும் எதிர்பார்க்காமல் கொடைக்காகவே கொடுப்பது முதிர்ச்சி.
5
தான்செய்வ
தெல்லாம் தன்னுடைய சொந்த அமைதிக் கென்றே
உணர்வது முதிர்ச்சி.
6
தன்பேரறிவைத்
தரணிக்குணர்த்த முயல்வதை நிறுத்திக். கொள்வது முதிர்ச்சி.
7
எல்லோரும்
தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென
வேண்டா நிலையே முதிர்ச்சி.
8
பிறருடன்
தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளும் நிலையே முதிர்ச்சி.
9
தன்னோடு
தானே சமாதான மாக
இருந்திடு
வோரிடம் இருப்பது முதிர்ச்சி.
10
தேவையும்
ஆசையும்
பிரித்தறிந்
தாசையை விட்டிட முடிந்தால்
அதுவே முதிர்ச்சி.
11
பருப்பொருள்
எதிலும் இன்பம் இருப்பதாக் கருதுவ
தொழிந்தால் வருவது முதிர்ச்சி.
12
Comments
Post a Comment