பொறாமையில்லாது இருத்தல்
வாழ்க வளமுடன்!
வாழ்க்கையை வளமாக்கும் பல நற்பண்புகளை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்; கற்றபடி வாழ்ந்து வாழ்வில் நலம் பல பெறுவோம். அத்தகைய நலப் பண்புகளில் " பொறாமையில்லாது இருத்தல் " என்ற பண்பு குறித்து இன்று காண்போம். " அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றார் வள்ளுவர் .
பொறாமை என்பது பிறர் உயர்வு குறித்து பொறுத்துக் கொள்ள முடியாதத் தன்மையாகும். போட்டி நல்லது, பொறாமை நல்லதல்ல என நம் முன்னோர் நமக்குச் சொல்லிச் சென்றுள்ளனர். பிறர் வைத்திருக்கும் பொருள் குறித்தோ,அவர் பெற்றிருக்கும் மதிப்பு குறித்தோ எண்ணி அவரைப் போல் இல்லையே என ஏங்குவது பொறாமை.
இதனால் தீமை தான் வரும். 1.ஏக்கத்தினால் வரும் எண்ணத்தினால் சீவகாந்தம் செலவழியும்.
2. ஒருவரைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கும் போது அவரின் கருமையத்தில் உள்ள தீய பதிவுகளை நாம் அனுபவிக்க வேண்டியதாகிவிடும்.
3. ஆன்மீகத் தேடலில் முன்னேற்றம் கிடைக்காது.
பொறாமைப் படாமல் இருக்க வழி :
1. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை.
2. பாராட்டும் குணம்.
3."பொறாமை" யைத் திருப்பிப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே புரியும்.
நன்றி! வாழ்க வளமுடன்!!
அருள்நிதி.எம்.பிரேமா
அசனமாப்பேட்டை தவமையம்.

Comments
Post a Comment