சூழ்நிலைகளுக்காக கனவுகளை COMPROMISE செய்யாதீர்கள்

*ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?*

*💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.*

*💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.*

*💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.*

*💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.*

*💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.*

*💪 வாய்ப்பு எங்கே??? எங்கே??? என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.*

*💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.*

*💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.*

*💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.*

*💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.*

*💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே??? எங்கே??? என்கிற தேடல் இருக்கிறது.*

*💪 தொடர்ந்து எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.*

*💪 சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.*

*💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.*

*💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.*

*💪 குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.*

*💪 கடமைகள் காத்துக் கிடக்க பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.*

*💪 நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.*

*💪 அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.*

அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்💐💐💐

*🌷”சூழ்நிலைகளுக்காக கனவுகளை COMPROMISE செய்யாதீர்கள்”*🌷

Comments

Popular posts from this blog

புத்தர் (கௌதம புத்தர்) கூறிய முக்கியமான உண்மைகள்