நல்ல எண்ணங்களே

*'' நல்ல எண்ணங்களே. ''*

எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும்.
உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு. 

எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள்.

ஆப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் காலணி கம்பெனி ஒன்று தனது பொருட்களை விற்பனை செய்வதற்காக ஒரு ஆளை அனுப்பியது. 

அவர் அந்த ஊருக்குச் சென்று சில நாட்கள் தங்கினார். தெருவில் நடப்பவர்களின் கால்களை ஆர்வத்தோடு கவனித்தார். தங்கள் கம்பெனியின் காலணிகளை அங்கே விற்க முடியுமா என்று நோட்டம் விட்டார்.

அந்த கிராமத்தில் வசித்தவர்கள் யாருமே கால்களில் காலணிகளை அணியாமல் நடந்து சென்றனர். இதைப் பார்த்த விற்பனையாளருக்கு சலிப்பு ஏற்பட்டது. 

இந்த மக்களுக்கு காலணியின் உபயோகமே 
தெரியவில்லை.
ஏற்கெனவே காலணி அணிந்து அதன் உபயோகம் தெரிந்தவர்கள் என்றால் நமது சரக்குகளை விற்பனை செய்வது எளிது. 

இங்கே ஒரு ஜோடி காலணிகளைக் கூட விற்பனை செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்தார். எனவே தனது கம்பெனிக்குத் திரும்பிச் சென்றார்.தனது முதலாளியிடம் நடந்தவைகளைத் தெரிவித்தார்.

கம்பெனி அவருக்குப் பதிலாக மற்றொரு விற்பனையாளரை அதே கிராமத்திற்கு அனுப்பியது.

அவர் காலணி அணியாத மக்களைப் பார்த்தார். அடடா நமது சரக்குகளை விற்பதற்கு இது தான் சரியான இடம். இவர்களுக்கு காலணிகளை அணிவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பதை விளக்கி விட்டால் போதும். விற்பனை சூடு பிடித்து விடும் என்று எண்ணமிட்டார். 

தனது எண்ணத்தை செயல்படுத்தினார். மக்களை ஒரு மரத்தின் நிழலில் கூட்டினார். காலணிகளின் பயன்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொன்னார்.

“கல்லிலும் முள்ளிலும் நடந்து செல்லும் நீங்கள், காலில் அடிபட்டால் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டி வரும். 

இதனால் உங்கள் வேலை தடைப்படும். கூலி குறையும். இதைத் தடுப்பதற்காக கால்களுக்குப் பாதுகாப்பாக காலணிகளை அணிந்து செல்லுங்கள்” என்றார்.

விவசாயிகளுக்கு அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. அந்த ஊரில் விவசாயத்தில் ஈடுபட்ட பலர், இருட்டு நேரத்தில் காட்டு வழியில் நடந்து வரும் போது பாம்பு கடித்து இறந்து போயிருக்கின்றனர். 

கால்களில் ஷூக்கள் இருக்குமானால் பாம்பு விஷத்தில் இருந்து தப்பி உயிர் பிழைக்கலாம் என்று அறிந்து கொண்டனர். 

எனவே போட்டி போட்டுக் கொண்டு காலணிகளை வாங்கி அணிந்தனர். விற்பனையாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது.

காலணிகளை விற்பனை செய்ய வந்த ஒருவர் எதைத் தடையாக நினைத்துப் பின் வாங்கினாரோ, அதே செயலை மற்றொருவர் சாதகமாக நினைத்து வெற்றி கண்டார். 

நாம் ஒரு செயலை எப்படி நினைக்கிறோமோ, 
அப்படியே அது மாறி விடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மிகச் சிறந்த உதாரணமாகும்.


*உங்கள் எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும்.* 

*நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும்.* 

*எண்ணங்கள் உங்களை உயர்த்தும்....*

*🍃Sri Yoga & Naturopathy*🍃

*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*

Comments