பழக்கம் பயிற்சி

 பழக்கம் பயிற்சி . 


_*என்னைப் பொருத்தவரை ...*_

_*புத்தகங்களை விட*_

_*மனிதர்கள் தான்....*_

_*வாழ்க்கையை அதிகம்*_

_*கற்றுக்*_ _*கொடுக்கின்றனர்.*_


_*அடுத்த நிலையை*_ 

_*அடைய முயற்சி செய்*_

_*அடுத்தவன் நிலையை*_

_*அடைய முயற்சி செய்யாதே.*_


1. எது உயர்ந்ததோ அது தாழும், 

எது தாழ்ந்ததோ அது உயரும்.


2. யார் எதிரி யார் நண்பன்

காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம்தான் நண்பன்.

காலம்தான் குரு. காலமே கடவுள்.


3. கடவுள் என்பது அறிவல்ல. அதுவொரு அனுபவம். அது படிப்பறிவல்ல, பட்டறிவு. அது அறிந்து கொள்வதல்ல, கேட்டுத் தெரிந்து கொள்வதும் அல்ல, அது உணரப்படுவது.


4. உறவு என்பது தொடர்பு கொள்ளும் விதத்தில் அமைந்தது. பிறரைத் தொடர்பு கொள்ள தன்னைத் தெரிய வேண்டும். தன்னைத் தெரிய தனிமைப் பழக வேண்டும். தனிமைப் பழகத் தீவிர சிந்தனை வேண்டும். தீவிர சிந்தனை என்பது ஒரு பழக்கம். ஒருவித பயிற்சி..


5. சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தைவிட அன்பு முக்கியம். 

Comments